அந்தமான் நிக்கோபார் தீவு: அதிகாலை நிலநடுக்கம்!

Published On:

| By Selvam

அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று (மார்ச் 6) அதிகாலை 5 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.0 மற்றும் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

earthquake strikes andaman and nicobar islands

நேற்று இரவு 12.45 மணியளவில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ரிக்டர் அளவுகோலில் 2.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் நிலநடுக்கத்தால் கீழே விழுந்ததாகவும் இரவு முழுவதும் பயத்தில் இருந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

செல்வம்

டேவிட் வார்னர் ரிட்டையர் ஆகியிருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங் அதிரடி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share