சிக்கிம்: அதிகாலையில் நிலநடுக்கம்!

Published On:

| By Selvam

சிக்கிம் மாநிலத்தில் இன்று (பிப்ரவரி 13) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏறபட்டது.

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

ADVERTISEMENT

நேற்று மாலை 4.18 மணியளவில் அசாமின் நாகோன் நகரில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்தநிலையில், இன்று அதிகாலை 4.15 மணியளவில் சிக்கிம் மாநிலம் யுக்சோம் நகரில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலநடுக்கமானது யுக்சோமில் இருந்து வடமேற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ADVERTISEMENT

செல்வம்

ரஷ்ய – உக்ரைன் போரை மோடியால் நிறுத்த முடியும்: அமெரிக்கா

நயன்தாரா மீதான விமர்சனம் பற்றி மாளவிகா மோகனன் கொடுத்த பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share