வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் : ஸ்டாலின்

Published On:

| By Kavi

இந்தியா கூட்டணி வெற்றிக்கு ஆவலுடன் காத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி கலைஞரின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சிபிஐ தலைவர் சீதாராம் யெச்சூரி, பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகிய இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “ இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒன்று கூடி கலைஞருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

கலைஞரை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய தலைவராகவும் போற்றி வணங்குகிறோம்.

தேசத்தை கட்டியெழுப்பியதில் முக்கிய பங்காற்றி கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் எழுப்பியவர்.

இந்தியாவின் பல பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார். ஜூன் 4-ஆம் தேதி எங்கள் கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம். இது இந்திய மக்களின் வெற்றி” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘ரயில்’ ஆக மாறிய ‘வடக்கன்’… காரணம் இதுதான்!

தேர்தல் வெற்றி கொண்டாட்டம் – தயாராகும் காங்கிரஸ் : தயங்கும் பாஜக

புதிய எண்ணம்… துவண்டுவிடாத உத்வேகம்: குமரி தியானம் குறித்து மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share