50 பைசா நாணயங்கள் செல்லுமா?

Published On:

| By Balaji

50 பைசா முதல் ரூ.10 வரையிலான அனைத்து நாணயங்களும் செல்லும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் அடிக்கடி புதிய வடிவில் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. அவ்வாறு புதிய வடிவிலான நாணயங்கள் வெளிவரும் போது பழைய நாணயங்களின் பயன்பாடு நிராகரிக்கப்படுகிறது. கடைகளிலும் பேருந்துகளிலும் இவ்வாறான நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வங்கிகளில் கூட சில நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 50 பைசா முதல் அனைத்து நாணயங்களும் அதிகாரப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் புதிய வடிவில் இருந்தாலும் பழைய வடிவில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ரிசர்வ் வங்கியானது புதுப்புது நாணயங்களை அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் போன்றவற்றை மையமாக வைத்து வெளியிட்டு வருகிறது. அந்த நாணயங்கள் நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும். அதேநேரத்தில் புதிய உருவங்களிலும், புதிய வடிவங்களிலும் நாணயங்கள் வெளியிடப்படும். அந்த வகையில், நாட்டில் தற்போது 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் 10 ரூபாய் மற்றும் 50 பைசா உள்ளிட்ட சில நாணயங்கள் செல்லாது எனக்கூறி வாங்க மறுப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.

ADVERTISEMENT

இந்த நாணயங்கள் செல்லாது என்று பரப்பப்படும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்பவேண்டாம். அனைத்து வங்கிகளும் அனைத்து நாணயங்களையும் பணப் பரிவர்த்தனையின் போது பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நாணயங்களைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது. பொதுமக்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பணப் பரிவர்த்தனைக்கு இந்த நாணயங்களைப் பயன்படுத்தலாம்.’

**

ADVERTISEMENT

மேலும் படிக்க

**

**[கதவடைத்த பன்னீர்: திமுகவில் இணையும் தங்கம்](https://minnambalam.com/k/2019/06/28/30)**

**[வெளியேறிய தங்கம்: தினகரன் ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/06/28/54)**

**[சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!](https://minnambalam.com/k/2019/06/26/26)**

**[தங்கம் வந்தால் வெளியேறிவிடுவேன்: எடப்பாடியிடம் பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/27/88)**

**[டிஜிட்டல் திண்ணை: நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் மீது கண் வைக்கும் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/27/89)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share