Skip to content
  • முகப்பு
  • அரசியல்
      அரசியல்
      டிஜிட்டல் திண்ணை
  • சமூகம்
      தமிழ்நாடு
      இந்தியா
      உலகம்
  • பொழுதுபோக்கு
      செய்தி
      சினிமா விமர்சனம்
      ஓடிடி
      போட்டோ கேலரி
  • பணம்
      பொருளாதாரம்
      சந்தை
      முதலீடு
      வேலைவாய்ப்பு
  • லைஃப்ஸ்டைல்
      உடல்நலம்
      மனநலம்
      வீட்டு மருத்துவம்
      ரெசிப்பி
      பியூட்டி & பேஷன்
  • சிறப்புக் கட்டுரை

10 நாட்களில் 1 கோடி தேசியக்கொடி விற்பனை!

By Minnambalam

|

Published on 12 Aug 2022, 1:02 PM

Follow us on
Google News
Add As A Preferred
Source On A Google

Share:

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தபால் துறை சார்பில் 10 நாட்களில், 1 கோடி தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் 15-ம் தேதி வரை தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பு படங்களில் தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் கேட்ட்க்கொண்டனர்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள 1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் கடந்த பத்து நாட்களில் 1 கோடி தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.

ஆன்லைன் வழியாக 1.75 லட்சம் தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் தேசியக்கொடி வாங்குபவர்களுக்கு இலவசமாக அவர்களது வீடு தேடி சென்று, தேசியக்கொடி கொடுக்கப்படுகிறது. இந்தியா முழுவதும், 4.2 லட்சம் ஊழியர்கள் தேசியக்கொடி விற்பனைக்கு பங்காற்றியுள்ளனர். கிராமங்கள், நகரங்கள், மலைப்பகுதகள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேசியக்கொடியின் முக்கியத்துவம் குறித்து தபால் துறை ஊழியர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 15 வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக்கொடி வாங்கலாம். அதே போல, epostoffice.gov.in என்ற இணையதளத்திலும் தேசியகொடி வாங்கலாம்.

ADVERTISEMENT

இந்திய மக்களிடம் தேசப்பற்றை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தபால் துறை தெரிவித்துள்ளது.

செல்வம்

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel
சமீபத்திய பதிவுகள்
  • PMK-Shot Dead

    குடியாத்தம் அருகே பாமக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

    10 Nov 2026, 6:23 AM

  • Weather-Rain-Tamil Nadu

    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    10 Nov 2026, 6:02 AM

  • Trump Qatar PM Talks on Ending Iran War

    ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா? கத்தார் பிரதமருடன் பேசிய டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

    10 Nov 2026, 5:32 AM

  • AIADMK MLAs Disqualification

    தவெகவுக்கு தாவிய 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்: சபாநாயகர் இன்று விசாரணை!

    10 Nov 2026, 4:28 AM

  • TVK MLAs Meeting

    அடிதடி, ஆபாச மெசேஜ்.. அடுத்தடுத்து சர்ச்சை.. நாளை தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்?

    10 Nov 2026, 4:13 AM

  • Deputy speaker Ravi Shankar

    துணை சபாநாயகர் ரவிசங்கர் சர்ச்சை: தாக்குதல் புகார் முதல் தவெக விசாரணைக் குழு வரை- நடந்தது என்ன?

    10 Nov 2026, 3:54 AM

  • Pawan Kalyan

    3-வது மனைவியை பிரிவதாக அறிவித்த ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்!

    10 Nov 2026, 3:23 AM

  • எங்கே செல்லும் இந்த பாதை… : அப்டேட் குமாரு

    9 Nov 2026, 11:46 PM

  • சுகர் டெஸ்ட்: HbA1c-ஆ, வெறும் வயிற்றுச் சர்க்கரையா? எது துல்லியம்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

    9 Nov 2026, 8:24 PM

  • மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ .. முதல்வர் என்ன சொல்ல போகிறார் – கனிமொழி காட்டம்

    9 Nov 2026, 7:56 PM

About Us Contact Us Privacy Policy Terms & Condition
© 2026 All Rights Reserved to Minnambalam | Web Developed by Reptus