தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு விரைவில் இ-ஆதார் எண் கட்டாயமாகிறது!

Published On:

| By Minnambalam Desk

Tatkal Ticket

தட்கல் மூலமான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுக்கு விரைவில் இ-ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது. E-Aadhaar Number Soon Mandatory for Tatkal Ticket Booking!

தட்கல் டிக்கெட்டுகளை சாமானிய பொதுமக்கள் எளிதாக எடுத்துவிட முடியாது. தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவில் ஏஜெண்டுகளின் ஆதிக்கம்தான் உள்ளது. இது தொடர்பான சர்ச்சைகள் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தற்போது தட்கல் டிக்கெட் முறை, சாமானியர்களுக்கும் பயன்படும் வகையில் புதிய நடைமுறைகளை மேற்கொள்வதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதாவது தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது முதலில் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும்; ஆதார் OTP மூலம் சரிபார்க்கப்படும்; பின்னர்தான் முன்பதிவு செய்ய முடியும் என்கிற நடைமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் சாமானியர்களும் தட்கல் டிக்கெட் முன்பதிவு வசதியை எளிதாக பெற முடியும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share