ADVERTISEMENT

தெறி, புலி, ஏழை விவசாயி – அப்டேட்குமாரு

Published On:

| By Balaji

நேற்று அறிவித்த படி ‏திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அறிவிக்கப்படாமலே திடீரென்று வெளியான தேமுதிக பட்டியல் என ஆன் தி மார்க்கிற்கு வந்தன இரு கட்சிகளும். இன்று வெளியான விஜயின் புதிய படமான தெறி” திமுக,தேமுதிக வேட்பாளர் பட்டியல் ஆகியவைதான் நெட்டிசன்களின் வாயில் கிடைத்த அவல். சில ‘அட’ ட்விட்களும், பத்திரிக்கையாளர் ‘ஜான் பாபு ராஜ்’ அவர்களின் நிலைத்தகவலும் இன்று,

// @Ranga_Off

ADVERTISEMENT

அது என்னவோ தெரியல அண்னா ஓட முழு படத்தயுமே மீம்ஸ் ஸா கிரியேட் பன்றான்க????????????

#தெறி //

ADVERTISEMENT

//@sshanheeth

இப்பவே #Twitter ல பாதி படம் பாத்தாச்சு..

ADVERTISEMENT

மீதி சீன் இருந்தால் அதையும் போடுங்கடா

மொத்த படத்தையும் Twitter லயே பார்த்து முடிச்சுடுவம்

#தெறி //

// ‏@pulipumittai

விஜய் fan கிட்ட தெறி review கேக்குறதும். அதிமுக காரன்ட அம்மா ஆட்சிய பத்தி கேக்குறதும் ஒன்னுதான்.

#தெறி //

‏@karthiykj

தெறி நல்லா தான் இருக்கு ஆனால் புலி அளவுக்கு நல்லா இல்லை என்று சொல்லி விட்டு சென்றார் அந்த ஏழை விவசாயி ???? ???? ????????????

#தெறி //

//@sindhutalks

தெறி FDFS பாத்து ஒருத்தன் கோமாக்கு போய்ட்டான்.ஆனா அடுத்த 3வது நாளே அவன் தம்பி துப்பாக்கிடானு கத்திக்கிட்டு ட்விட்டர் வந்தான் #தெறி மொமண்ட் //

// ‏@thoatta

ஜில் – அதிமுக+ வேட்பாளர் பட்டியல்

ஜங் – திமுக+ வேட்பாளர் பட்டியல்

ஜக் – எப்படியும் கேகூ / மநகூ தான் //

// @drezhilan

2021 திமுக வேட்பாளர் பட்டியல் வேண்டுவோர் கவனத்திற்கு!

2016 பட்டியலை பத்திரபடுத்தி வைக்கவும்!

80% ஒத்து இருக்கும்! //

//‏@saysatheesh

திமுக வேட்பாளர் பட்டியல் அருமை.

மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள், கட்சிக்காக உழைத்தவர்கள், அவர்தம் வாரிசுகள் லிஸ்டில். பலே//

//@MuthuKr44507313

ஸ்டார் விஜய்ல சிறப்பு படங்களிள் பட்டியலில் மாறாது இருக்கும் கும்கி,மான் கராத்தே போல இருக்கு திமுகவின் வேட்பாளர் பட்டியல்!! //

//@sriramrp

யாரடா அது வேட்பாளர் பட்டியல் வெளியிட சொன்னா வாரிசு பட்டியல் ரிலீஸ் பன்றது.. #திமுக #DMK #TnElections //

//@kthirumani

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாயிடிச்சி…

அதுக்கேற்ற மாதிரி அதிமுக சைடில் பட்டி டிங்கரிங் வேலையை மறுபடியும் ஆரம்பிப்பாங்களோ..?#FB //

//‏@i_rajtuty

என்னய்யா நடக்குது மநகூ-தேமுதிக கூட்டணில.. தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடிவாகல.. ஆனா தேமுதிக வேட்பாளர் பட்டியல் வரிசையா வந்துகிட்டு இருக்கு..//

John Babu Raj

13 hrs ·

விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு திமுக மீது முன்பே வருத்தம் உண்டு. “எம்பி எலெக்ஷன்னா ரெண்டே தொகுதிதான். அதுலயும் ஒண்ணை ஜெயிக்க வச்சிட்டு, ஒண்ணை கலைஞரே தோற்கடிச்சிடுவார்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நண்பர்கள் குறைபட்டுக் கொண்டதுண்டு. இரண்டு தொகுதிகளிலும் வென்றால் அடுத்தமுறை மூன்று கேட்பார்கள், அதுதான் இந்த கணக்கு. அதிமுகவுக்கு திமுக மேல் என்பதால் ஒட்டியிருந்தார்கள். ஆனால், எத்தனை காலத்துக்கு?

அதிக தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றால்தான் அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். திமுக அதற்கு தயாரில்லை எனும் போது, தனித்து நிற்பது ஒன்றே வழி. விடுதலை சிறுத்தைகளின் இதே நிலைமைதான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், மதிமுகவுக்கும். காலம் கனிய மறுத்த போது அவர்களாகவே ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டார்கள்.

நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து ஒரு தெம்பு கிடைத்தவுடன் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள், “அதிக சீட் கேட்டா தரமாட்டாராம், ஆட்சியில பங்கும் கிடையாதாம், இப்போ வச்சோம்ல ஆப்பு” என்று ஸ்டேட்டஸ் போட்டு மகிழ்ந்தனர். நியாயம்தான், எவ்வளவு நாளாக அடக்கப்பட்ட சீற்றம்.

நான்கில் ஆரம்பித்து இப்போது ஆறாக பரிணமித்திருக்கும் இந்த கூட்டணி, தத்தமது கட்சிகளை காப்பாற்ற எடுக்கப்பட்ட ஒரு அவசரகால நடவடிக்கை. அதனை மாற்றத்துக்கானது, மக்களுக்கானது என்று பசப்பித் திரிகின்றனர். ‘அதிக சீட் கேட்டா தரமாட்டீங்க, ஆட்சியில பங்கும் கிடையாதாம்’ என்று திமுகவைப் பார்த்து சீறுவதைப் போல், இவர்களால் அதிமுகவைப் பார்த்து முணுமுணுக்கக்கூட முடியாது. முதலாவதாக அங்கு யாருக்கும் மரியாதையே கிடையாது. இரண்டாவது, அதிமுகவில் அதிக சீட் கேட்டோம், ஆட்சியில் பங்கு கேட்டோம் என்று வெளியில் சொல்லக் கூட முடியாத அளவுக்கு – குறைந்தபட்ச செயல்திட்டத்துக்குகூட லாயக்கில்லாத ஒரு பாசிச கட்சி அது.

இந்த லட்சணத்தில் எந்த அளவுகோலை வைத்து திமுகவும், அதிமுகவும் ஒன்று என இவர்கள் கூச்சலிடுகிறார்கள்? //

-லாக் ஆஃப்,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share