Zஉலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூத்து ராய் – ஹூனா சித்து ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி தொடர் இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நேற்று (அக்டோபர் 24) நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூத்து ராய் – ஹூனா சித்து ஜோடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து ஜூத்து ராய் 10 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்தப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் டோக்கியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்து ஹூனா சித்து கூறுகையில், **“சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தொடரில் எங்கள் ஜோடிமீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. அதற்காகக் கடினமாகப் போராடி தற்போது இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம்”** என்று கூறியுள்ளார்.
