தல 57 : ஈராக், சிரியா போரில் அஜித்குமார்!

Published On:

| By Balaji

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், அஜித் நடித்துவரும் படம் தல 57. இதன் படப்பிடிப்பு சிறிதுகால ஒத்திவைப்புக்குப் பிறகு சமீபத்தில்தான் தொடங்கியது. இந்தப் படத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொங்கல் அன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் மட்டும்தான். ஆனால் அந்த ஏமாற்றத்தைப் போக்கும்வகையில் தற்போது படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. இது, நான்காவது முறையாக வெளியாகும் படப்பிடிப்புத் தள புகைப்படமாகும்.

ADVERTISEMENT

வெளிநாட்டு சண்டைக் கலைஞர்கள் ஆயுதம் ஏந்திச் செல்லும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இவை ஈராக், சிரியா போர் நிலவரங்களை சித்தரிப்பதுபோல் காட்சியளிக்கின்றன. இதிலுள்ள எந்தப் புகைப்படத்திலும் அஜித் இல்லாதது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஜனவரி இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

,”

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share