ட்ரூ காலருக்குப் போட்டியாக ஒரு செயலி!

Published On:

| By Balaji

தேவையற்ற போன் அழைப்புகளைத் தவிர்க்கும் வண்ணம் கூகுள் நிறுவனம் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்கிறது .

செல்போன் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை அதில் வரும் சில தேவையற்ற அழைப்புகள். தேவையற்ற அழைப்புகளுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களுக்குச் சாதக மற்றும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் சரியானதைத் தேர்வு செய்வது வாடிக்கையாளர்கள் கைகளில் உள்ளது. இந்தத் தேவையற்ற அழைப்புகளைக் கட்டுப்படுத்த ஏராளமான செயலிகள் இருக்கின்றன. ஆனாலும்கூட இந்தப் பிரச்சினை முற்றிலும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்குத் தேர்வு காணும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறது கூகுள்.

ADVERTISEMENT

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம், ‘போன்’ என்ற செயலியை கட்டமைத்துப் பரிசோதித்து வருகிறது. இதில் ஸ்பாம் கால்களை பில்டர் செய்யும் ‘காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு’ (Caller ID and Spam Protection) வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி தேவையற்ற அழைப்புகளை நேரடியாக வாய்ஸ் மெயிலிற்கு அனுப்பிவிடுகிறது. நீங்கள் ‘காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு’ சேவை ஆனில் இருக்கும்போது, இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்களில் கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்களின் கால் செய்கையில் அவர்கள் குறித்த பிற தகவல்கள் இதன்மூலம் கிடைக்கும். இதனால் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்துத் தடுத்துவிடலாம்.

ஏற்கெனவே ட்ரூ காலர் போன்ற செயலிகள் இதே வேலையைத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றில் இல்லாத கூடுதல் வசதிகளையும் இதில் தர ஆயத்தமாகி வருகிறது கூகுளின் ‘போன்’. இந்தச் செயலி விரைவில் வாடிக்கையாளர்களின் முழுப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share