ஒரு கப் காபி!
கேள்வி: எத்தனை முறை தோல்வியால் துவண்டு விழுகிறாரோ அதற்கு ஒரு தடவை அதிகமாக மீண்டும் ஒரு முறை எழுபவர் யாரோ அவர்தான் வெற்றி வீரர் என்பதை சாம்பியன் என்பதன் விளக்கமாகக் கூறலாம் என்று பல வருடங்களுக்கு முன் என்னிடம் யாரோ ஒருவர் கூறினார். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நல்லது கெட்டது இரண்டையும் சந்திக்கிறார்கள். நிறைய பேர் ஒரு முறை விழுந்துவிட்டால் பிறகு மீண்டும் எழுந்திருப்பதே இல்லையே அது ஏன்?
ஜானி விம்ப்ரே:
மக்கள் தோல்வியால் விழுந்துவிட்டால் மீண்டும் எழுவதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மையான பகைவனை அடையாளம் காண்பதில்லை. பகைவன் என்று நான் குறிப்பிடுவது, இதைத்தான்: நிறைய சந்தர்ப்பங்களில் நாம் செய்யும் தவறுகளால் தோல்வியடைகிறோம், அல்லது ஏதாவது தடைகள் நம் பாதையில் குறுக்கிடுகின்றன.
நம் வாழ்வின் ஏதோ ஒரு நிலையில் சுய பச்சாதாபத்தில் நாம் மூழ்கிவிடுகிறோம். நமக்கு நாமே பரிதாபப்பட்டுக்கொள்கிறோம். மற்றவர்கள் நம்மைப் பார்த்து அனுதாபப்படுவது என்பது பரவாயில்லை, ஆனால், நம்மைப் பார்த்தே நாமே பச்சாதாபப்படுவது மிகவும் ஆபத்தானது மட்டுமல்லாமல், உயிருக்கே உலை வைக்கக்கூடியது போன்ற ஒரு தளை.
மீண்டும் எழுந்து செயல்படாமல்போவது என்பது உள்முகப் போராட்டம். ஒருவருக்குள்ளே இருந்துகொண்டு அவரைச் செயல்பட முடியாமல் போகச் செய்யும் யுத்தம் இது. நாம் ஒவ்வொருவருமே நம் பகைவர் யார் என்று எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறோம். நமக்கு எதிரான ஒரு நபரையோ அல்லது ஏதோ ஒன்றையோ கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.
ஆனால், எனக்கு உண்மையான பகைவன் நான்தான். அவன் எனக்குள்ளேதான் இருக்கிறான். எனக்குள் இருப்பது என்ன என்பதை நான் கண்டறிந்தாக வேண்டும். இதுதான் என்னைப் பிடித்து வைத்திருக்கிறது, அதுதான் என்னை மீண்டும் எழ விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
உங்களைக் கீழே பிடித்து இழுப்பது நீங்களேதான். அங்கேயே கிடப்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கிறீர்கள். எனவே, உங்களுக்குள்ளே போய் சுய பரிசீலனை செய்து, உங்களை முன்னேற விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.
உங்களைத் தவறு செய்ய வைத்த, நீங்கள் முன்னேறாமல் கீழ் மட்டத்திலேயே இருக்கச் செய்வது எது என்பதைக் கண்டறிய வேண்டும். அது குற்ற உணர்வாக இருக்கலாம், கூச்சமாக இருக்கலாம். இவை உங்களைக் கட்டுப்படுத்தி அடிமட்டத்திலேயே இருக்கச் செய்துவிடும்.
உங்களை நீங்களே சுய பரிசீலனை செய்துகொண்டு, உங்களுக்குள் புதைந்து கிடக்கும் உள்முக வெற்றியாளனைக் கண்டறிய வேண்டும். இதற்கு நீங்கள் முதலில் அங்கே இருக்கும் பகைவர்களைக் கண்டறிந்து அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும்.
**- ஜானி டி. விம்ப்ரே**
நன்றி: From the HOOD To doing GOOD (தீரட்டும் வேதனை மலரட்டும் சாதனை) என்னும் நூலிலிருந்து. வெளியீடு: சக்சஸ் ஞான்
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://minnambalam.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://minnambalam.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://minnambalam.com/k/2019/05/17/56)
**
.
.





