உலகின் மிகச்சிறிய மொபைல்!

Published On:

| By Balaji

லண்டனைச் சேர்ந்த Clubit என்ற நிறுவனம் உலகின் மிகச் சிறிய புதிய மொபைல் ஒன்றினை வடிவமைத்துள்ளது.

Zanco tiny t1 என்ற இந்த புதிய மாடல் 46.7 மிமீ x 21 மிமீ x 12 மிமீ அளவும் 13 கிராம் எடையும் கொண்டுள்ளது. சுமார் 64 x 32 பிக்சல் திரையளவு கொண்ட இந்த மொபைல் நேனோ சிம் வசதியுடன் செயல்படும் என்றும், அதில் 2 G நெட்வொர்க் மட்டும் பயன்படுத்த முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

2000 mAH பேட்டரி சக்தி கொண்ட இந்த மொபைல் அதிக நேரம் பயன்படுத்தும் வகையில் இருக்கும். இந்த மாடலில் 32GB இன்டெர்னல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 300 தொலைபேசி எண்கள் மற்றும் 50 மெசேஜ்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் இந்த புதிய மாடல் வெளியாகும் என்று Clubit நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடலின் விலை ரூ.2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிரிடிட் கார்ட் அளவை விடச் சிறியதாகவும், ஒரு நாணயத்தின் எடையை விடக் குறைந்ததாகவும் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share