ADVERTISEMENT

கார் விபத்து… மதுரை ஆதீனம் மீது புகார்!

Published On:

| By Selvam

DYFI complaint against Madurai Aadheenam

மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, மதுரை ஆதீனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (மே 5) புகார் அளிக்கப்பட்டது. DYFI complaint against Madurai Aadheenam

மே 3-ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற அனைத்துல சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் சென்றுகொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது, அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து சென்னை சென்ற மதுரை ஆதீனம், பாகிஸ்தான் பற்றி பேசியதால் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கமளித்த கள்ளக்குறிச்சி காவல்துறை, “கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து” என்று தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில், விபத்துக்குள்ளான மற்றொரு காரின் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், வானக விபத்து தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. DYFI complaint against Madurai Aadheenam

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share