வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று ஜூலை 18-ந் தேதி சோதனை நடத்தினர். DVAC AIADMK
சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த பிப்ரவரி மாதமும் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடைபெற்றது.
