ரூ.100 கோடி வசூலித்த ’தசரா’!

Published On:

| By Kavi

புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஒடேலா ஸ்ரீகாந்த். இவர் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் தசரா.

சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் நானி – கீர்த்தி சுரேஷ்  நடித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.தெலுங்கில் உருவான தசரா திரைப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தனர்.

இப்படம் மார்ச்  30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

ADVERTISEMENT

இந்நிலையில், தசரா திரைப்படத்திற்கு ஏழு நாட்களில்  உலகளவில் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது

இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்து உள்ளது. மறுபுறம் தசரா வெளியான அடுத்த நாளில் வெளியான பத்துதல, விடுதலை ஆகிய இரண்டு படங்களும் வசூலில் தடுமாற்றத்தை எதிர்கொண்டுவருகின்றன.

ADVERTISEMENT

இராமானுஜம்

ஆதாரத்தை காட்டுங்கள் ஆளுநரே: கனிமொழி காட்டம்!

நாடாளுமன்ற தேர்தல்: “பாஜக தலைமையில் கூட்டணி”: அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share