தலைவர் 170 அப்டேட் : துஷாரா விஜயனுக்கு அடித்த ஜாக்பாட்..!

Published On:

| By Monisha

dushara vijayn joined thalaivar 170 squad

லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ ஞானவேல் இயக்குகிறார்.

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் லைக்கா நிறுவனம் தலைவர் 170 படத்தில் நடிக்க போகும் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்ஸ் குறித்த விவரங்களை அறிவித்து வருகின்றது.

அக்டோபர் 1 ஆம் தேதி (நேற்று) தலைவர் 170 படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைப்பார் என்று லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தது. நான்காவது முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ள ஓர் பிரபல நடிகை பற்றிய அப்டேட்டை லைக்கா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை, கழுவேத்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான துஷாரா விஜயன், தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளதாக லைகா நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த படங்களின் வெற்றிக்கு துஷாரா விஜயனின் திறமையான நடிப்பு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

தலைவர் 170 படத்தின் மூலம் மீண்டும் “நம்ம ஹார்ட்ட கொத்தா எடுத்துக்கிட்டு போக” தயாரா இருக்காங்க துஷாரா விஜயன்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணாமலை கொண்டு போன ஃபைல்!

பி.டி.உஷாவின் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழ்நாடு வீராங்கனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share