துர்கா ஸ்டாலின் சகோதரி மரணம்: இன்று மாலை இறுதிச்சடங்கு

Published On:

| By Selvam

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இளைய சகோதரி சாருமதி சண்முக சுந்தரம் நேற்று (பிப்ரவரி 4) இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.

துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என்ற இரண்டு சகோதரிகளும் ராஜமூர்த்தி என்ற சகோதரரும் உள்ளனர்.

இதில் இளைய சகோதரியான சாருமதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சாருமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

அவரது கணவர் சண்முகசுந்தரம். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகனும் அபிராமி என்ற மகளும் உள்ளனர்.

மறைந்த சாருமதியின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற உள்ளது.

செல்வம்

டி.பி.கஜேந்திரன் மறைவு: நண்பருக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்

“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share