நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று (மே 24) தனது 80-ஆவது பிறந்தநாளான சதாபிஷேக விழாவை கொண்டாடுகிறார். சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், உறவினர்கள் நேரில் சென்று இல.கணேசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடந்த மே 19-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்திற்கு சென்று இல.கணேசன் சகோதரர் மகள் காயத்திரி சத்யநாராயணன் தனது கணவருடன் 80ஆவது பிறந்தநாள் விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றதால், தொலைபேசி வாயிலாக இல.கணேசனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். durga stalin greeting l ganesan for his birthday
