திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மூன்று திமுக கவுன்சிலர்களை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். duraimurugan suspend dmk councillors
திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக மேயர் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் நீடித்து வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 51 வார்டு உறுப்பினர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள்.

மேயர் சரவணன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஆளும்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி வந்தனர்.
மேலும் சரவணனை மேயர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி தலைமையிடம் தொடர்ச்சியாக முறையிட்டு வந்தனர்.
இந்தநிலையில் நவம்பர் 21-ஆம் தேதி திருநெல்வேலி மாநகராட்சி குறைதீர் முகாமின் போது மக்கள் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேயர் சரவணன் நிறைவேற்றி தரவில்லை என்று கூறி 20 திமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் மேயர் சரவணனுக்கு எதிராக திருநெல்வேலி மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

இந்தநிலையில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் மற்றும் மாநகர பிரதிநிதி ஆர்.மணி (௭) சுண்ணாம்பு மணி ஆகியோரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டைச் சேர்ந்த மாநகர பிரதிநிதி ஆர்.மணி (௭) சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். duraimurugan suspend dmk councillors
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜப்பானிய காடை வளர்ப்பு: இலவசப் பயிற்சி!
கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
இந்தியா வர கனடா குடிமக்களுக்கு அனுமதி!
பியூட்டி டிப்ஸ்: கூந்தல் உதிர்வைத் தடுக்க வீட்டிலேயே செய்யலாம் ஹேர் ஆயில்!
