திமுக மாசெக்கள் கூட்டம்… துரைமுருகன் அறிவிப்பு!

Published On:

| By Selvam

duraimurugan announced dmk district secretaries

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் திமுகவை பொறுத்தவரையில், 8 மண்டல பொறுப்பாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு பூத்களிலும் 30 சதவிகிதம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டார். duraimurugan announced dmk district secretaries

இந்தநிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜூன் 5) அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் ஜூன் 7 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அதுபோது மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். duraimurugan announced dmk district secretaries

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share