திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (பிப்ரவரி 17) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். Duraimurugan admitted apollo hospital
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.117 கோடி மதிப்பீட்டில் 14 கோயில்களில் புதிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அப்பல்லோ சென்று நலம் விசாரித்தார்.