முதல்வர் விஜய் (Vijay) அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை வரவேற்க வேண்டும் என்று மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ (Durai Vaiko) எம்.பி. தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களிடம் நேற்று (மே 25) கூறியதாவது: பத்திரிக்கை தோழர்கள், ஊடக நண்பர்களுக்கு நான் சொல்றது… தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்றது வந்து, இது வந்து நானு மதிமுக சார்பாவோ எதுவும் சொல்லல. அவரு (விஜய்) இப்பதான் முதலமைச்சர் ஆயிருக்கிறார். மந்திரி சபையே கிட்டத்தட்ட முழுமையான மந்திரி சபை இப்பதான் சில நாட்களுக்கு முன்னாடிதான் அமைச்சிருக்காங்க.
முந்தைய ஆட்சியில் இருக்கிற நியமிக்கப்பட்ட அதிகாரிகள்… பல்வேறு தமிழ்நாடு முழுக்க இருக்கிற அனைத்து துறைகளுடைய அதிகாரிகள் பார்த்தீங்கன்னா, முன்னாடி இதுக்கு முன்னாடி ஆட்சி செய்தவங்க நியமிச்சவங்கதான். மாத்திருக்காங்க, பல்வேறு இடங்கள்ல காவல்துறை சார்ந்தவங்களும் சரி, அதிகாரிகளும் சரி, நீங்க மாவட்ட ஆட்சியர்களும் கூட பல மாவட்டங்கள்ல மாற்றங்கள் கொண்டு வந்திருக்காங்க. ஆனா, அந்த மாற்றங்கள் நடந்துட்டு இருக்கு, நிர்வாக ரீதியா மாற்றங்கள் நடந்துட்டு இருக்கு.
அது வந்து ஒரு கால அவகாசம் கண்டிப்பா நம்ம கொடுக்கணும் நம்ம. குறைந்தபட்சம் ஒரு ஆறு மாசம்… ஆறு மாதத்துல இருந்து ஒரு வருடம் வரை ஒரு நம்ம ஒரு வெயிட்டிங் டைம்… அது வந்து நம்முடைய முதலமைச்சர் சகோதரர் விஜய்க்கும் சரி, புதிய அரசாங்கத்திற்கும் கண்டிப்பா கால அவகாசம் கண்டிப்பா கொடுக்கணும்.
கூட்டணி ஆட்சி என்பது அருமையான விஷயம், நல்ல விஷயம். இது வந்து ஒரு ஜனநாயகத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு ஒரு தனி நபரோ, ஒரு தனி இயக்கமோ இருக்கிறதைவிட, பல ஒரு இயக்கங்கள் சேர்ந்து வரும்போது, ஒரு தவறு நடந்ததுன்னா, அதை சுட்டிக்காட்ட இல்ல கண்டிக்கிறதுக்குரிய ஒரு சூழ்நிலை உருவாகுது. இது ‘கலெக்டிவ் ரெஸ்பான்சிபிலிட்டி’ (Collective Responsibility) -ன்னு நம்ம சொல்லணும்.
நம்ம மாநிலத்துல கூட்டணி ஆட்சி தொடர்ந்து வந்தால் நல்லதுதான் சொல்லுவேன் நானு. கண்டிப்பா நல்லதுதான் சொல்லுவேன். இதை யார் வேண்டாம்னு சொல்லுவாங்க? அதனால இது மக்களால், அனைத்து இயக்கங்களாலும் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாதான் நான் பார்க்கிறேன். இவ்வாறு துரை வைகோ கூறினார்.










