திமுக மாநிலங்களவை எம்.பி-க்கள் சண்முகம், வில்சன், எம்.எம்.அப்துல்லா, மதிமுக எம்.பி வைகோ, பாமக எம்.பி அன்புமணி, அதிமுக எம்.பி சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி-க்களின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. Durai Vaiko says it was very sad
இந்தநிலையில், காலியாகவுள்ள மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக சார்பில் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், சல்மா மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தநிலையில், மதிமுகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்காதது வருத்தமளிக்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று (மே 30) தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், கூட்டணி ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது, மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட்டை ஒதுக்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தோம்.
மாநிலங்களவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. நிச்சயமாக திமுக தலைவர் ஸ்டாலின் சீட் கொடுப்பார் என்று சொன்னார்கள். அதை ஏற்றுக்கொண்டோம். ஆனால், தற்போது மதிமுகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்காததில் வருத்தம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் நலன் கருதி அதனை கடந்து செல்கிறோம்” என்று தெரிவித்தார். Durai Vaiko says it was very sad