லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது பட இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருள் சரவணன் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இருந்தார்.
படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் அவரின் அடுத்த பட இயக்குநர் குறித்த விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. இடையில் சிலரின் பெயர்கள் அடிபட்டாலும் கூட எந்தவொரு உறுதியான அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் லெஜெண்ட் சரவணனின் 2-வது படத்தை இயக்கப்போவது துரை.செந்தில்குமார் தான் என, உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சில நாட்களுக்கு முன் இதுகுறித்து செந்தில்குமார் அளித்த பேட்டியில் சரவணன் படத்தை இயக்கப்போவது உண்மை தான் என்றும், அது தன்னுடைய அடுத்த படமாக இருக்குமா? என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ‘கருடன்’ படத்திற்குப் பிறகு சரவணன்-செந்தில்குமார் கூட்டணி இணையவுள்ளது உறுதியாகி இருக்கிறது. இதில் இசையமைப்பாளராக ஜிப்ரானை ஒப்பந்தம் செய்திட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
சொந்த நிறுவனம் என்பதால் முதல் படம் போலவே, இதிலும் பெரிய பட்ஜெட்டில் படத்தினை தயாரித்திட சரவணன் முடிவு செய்திருக்கிறாராம்.
விரைவில் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அப்டேட்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ படங்களை இயக்கிய துரை. செந்தில்குமார் தற்போது சூரியின் ‘கருடன்’ படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்பு!
”எல்லாமே பிரமாண்டம்” SK 23-ல யாரெல்லாம் நடிக்கிறாங்கன்னு பாருங்க!