மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் இந்தியில் பேசியதால் எதுவும் புரியவில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 25) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மத்திய அரசின் புதிய அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சி.ஆர்.பாட்டில் மற்றும் இணை அமைச்சர்கள் சோமண்ணா, ராஜ் பூஷண் செளத்ரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
காவிரி விவகாரம், முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் நானும் தமிழக நீர்வளத்துறை செயலாளரும் விளக்கினோம். அவர்கள் அதனை கேட்டுக்கொண்டனர்.
ஆனால், இந்தியில் பதிலளித்ததால் எதுவும் புரியவில்லை. உடன் இருந்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர்களும் இந்தியில் தான் பேசினார்கள்.
எனக்கு சளி பிடித்திருந்ததால் சிறிது நேரம் மட்டுமே பேசினேன். தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை செயலாளர் நம்முடைய பிரச்சனைகள் குறித்து தெளிவாக பேசினார்.
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு பிறகும் கர்நாடகா தமிழகத்திற்கு அட்டவணைப்படி முறையாக தண்ணீர் திறந்துவிட்டதே கிடையாது. ரூ.6000 கோடி பட்ஜெட் கொண்ட காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தில் ரூ.250 கோடி மாநில அரசு செலவிட்டுள்ளோம். மீதி தொகையை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிங்கத்துடன் ஷூட்டிங்… மிரட்டும் ’மாம்போ’ ஃபர்ஸ்ட் லுக்!
கனிம வளங்களுக்கு வரி: மாநில அரசுகளுக்கே அதிகாரம்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!