நதிநீர் பிரச்சினை – அண்டை மாநில முதல்வர்களுடன் பேசலாமே?: எடப்பாடிக்கு துரைமுருகன் பதில்!

Published On:

| By Kavi

Durai Murugan response to Edappadi palaniswami

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. Durai Murugan response to Edappadi palaniswami

தமிழக சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று (மார்ச் 24) கூடியது. இன்றைய தினம் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அண்டை மாநில முதல்வர்களுடன் நெருக்கமாக இருக்கும் போது நமது தண்ணீர் பிரச்சினை பற்றி முதல்வர் பேசலாமே” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நீங்கள் முதலமைச்சராக இருக்கும் போது அண்டை மாநில முதல்வர்கள் விரோதிகளாக இருந்தார்களா? எத்தனையோ ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றன. அதனால் பயன் இல்லை என்பதால் தான் உச்ச நீதிமன்றம் சென்றோம்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிடும். விபி சிங் காலத்தில், பேசிப்பாருங்கள் என்று கலைஞரிடம் அவர் தெரிவித்தார். ஆனால் இனி பேச முடியாது என்று கலைஞர் கூறிவிட்டார். அதனால் தான் காவிரி ஆணையம் நமக்குக் கிடைத்தது.

மேகதாது அணை கட்டுவதற்கு அவர்கள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து காவிரி ஆணையத்தில் விவாதிப்பதற்காக முன் வைத்தனர்.

ஆனால், மேகதாது அணை குறித்து விவாதிக்கக் காவிரி ஆணையத்துக்கு உரிமை இல்லை என்று நாம் கூறியதால் தான் இந்த விவாதம் கைவிடப்பட்டுத் திட்ட அறிக்கை திரும்ப அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது” என்று கூறினார்.

மேலும் அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்” என்றும் குறிப்பிட்டார். Durai Murugan response to Edappadi palaniswami

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share