திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின், அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி இன்று (டிசம்பர் 7) திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துரை தயாநிதி இன்று காலையில் தனது சென்னை வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக குடும்பத்தினர் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அவருக்கு பிரெய்ன் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. அதாவது மூளைக்கு செல்லும் ரத்த நரம்புகளில் அடைப்பு இருப்பதால் இதை பிரைன் அட்டாக் என்றும் மருத்துவ வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
உடனடியாக துரை தயாநிதிக்கு அப்பல்லோவில் இதற்கு உண்டான அறுவை சிகிச்சை இன்று பிற்பகல் நடந்திருக்கிறது, தகவல் அறிந்து அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மதுரையில் இருந்து உடனடியாக புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருக்கிறார்.
அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் சென்று பார்த்ததாக கோபாலபுரம் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
நேற்று வரைக்கும் துரை தயாநிதி சென்னை வெள்ளம் தொடர்பான ட்விட்டுகளை ரீ ட்விட் செய்ததோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குழந்தை சிரிப்பை பார்த்ததும் களைப்பே தெரியவில்லை: காவலர் தயாளன்
சென்னை மீண்டு வர அனைத்து உதவிகளும் செய்யப்படும்: ராஜ்நாத் சிங்
