ADVERTISEMENT

பயணிகள் கவனத்திற்கு… எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

Published On:

| By Selvam

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் 17 எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. express train service time

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ADVERTISEMENT

“மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய எஸ்பிரஸ் ரயில் (126325) எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதே நாட்களில் மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.

மார்ச் 9-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் புறப்படும் சேது அதிவிரைவு ரயில், எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும்.

ADVERTISEMENT

மார்ச் 9-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரல் ரயில் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அதே நாளில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு சென்னை வரும் பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுக்கிறது.

ADVERTISEMENT

மார்ச் 8-ஆம் தேதி மன்னார்குடியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16180) பகுதிநேரமாக தாம்பரம் – எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 9-ஆம் தேதி காலை 6.35 மணிக்கு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு புறப்படும் மெமு ரயில், எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது அதே நாளில் தாம்பரத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும்.

மார்ச் 8-ஆம் தேதி நெல்லையில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எஸ்க்பிரஸ் ரயில் (12632) செங்கல்பட்டு – எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 2.45 மணிக்கு நெல்லைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு புறப்படும்” என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. express train service time

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share