சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட புறநகர் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மின்சார ரயில் சேவை உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். EMU Trains cancelled today
இந்தநிலையில், எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும் நாளையும் (மார்ச் 6,7) மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“சென்னை கடற்கரையில் இருந்து இன்றும் நாளையும் மதியம் 12.15, 1.15, 1.30, 2 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள், தாம்பரத்தில் இருந்து மதியம் 12.05, 12.35, 1 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இன்றும் நாளையும் காலை 10.40, 11, 11.30 மற்றும் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரயிலும் தாம்பரம் – கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து இன்றும் நாளையும் மதியம் 12.28, 12.40, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களும், கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும் கடற்கரை – தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இன்றும் நாளையும் 17 எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. EMU Trains cancelled today