கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து… வேற ஆப்ஷன் என்ன?

Published On:

| By Selvam

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று (மார்ச் 9) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. chennai suburban train cancelled

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற புறநகர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு மின்சார ரயில் சேவை என்பது பேருதவியாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்,

இந்தநிலையில், சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று அதிகாலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், பயணிகள் வசதிக்காக கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே அதிகாலை 4.10 மணி முதல் மாலை 4.55 மணி வரை 30 நிமிட இடைவேளையில் இருமார்க்கத்திலும் 46 மின்சார ரயில்கள் இயக்கப்படும். மாலை 4.10 மணிக்கு பிறகு சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்று என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. chennai suburban train cancelled

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share