ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து… காரணம் இதுதான்!

Published On:

| By Selvam

due to maintenance bad weather

கடந்த ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 243 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏர் இந்தியா விமானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறது.

இந்தநிலையில், பராமரிப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு ஏர் இந்தியா விமான சேவைகள் இன்று (ஜூன் 20) ரத்து செய்யப்பட்டுள்ளது. due to maintenance bad weather

ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்:

துபாய் – சென்னை AI906

டெல்லி – மெல்போர் AI308

மெல்போர்ன் – டெல்லி AI309

துபாய் – ஹைதராபாத் AI2204

புனே – டெல்லி AI874

அகமதாபாத் – டெல்லி AI456

ஹைதராபாத் – மும்பை AI-2872

சென்னை – மும்பை AI571

இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். மாற்று விமானங்களில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை எங்களுடைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பயணத்தை ரத்து செய்தாலோ, வேறு ஒரு நாளுக்கு பயணத்தை மாற்றினாலோ முழு தொகையும் பயணிகளுக்கு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share