தமிழக சட்டமன்றத்தில் மார்ச் 24-ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 27) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது. Udhayanidhi did not attend
இந்தநிலையில், துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக இன்று சட்டமன்றத்திற்கு வரவில்லை. இதன்காரணமாக, முதல்வர் ஸ்டாலின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
முன்னதாக இன்று காலை சட்டமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். பாஜக தவிர அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. Udhayanidhi did not attend