இந்திய குழந்தைகள் உள்பட அனைவருக்கும் அரபி கட்டாயம்: துபாய் நிர்வாகம் முடிவு!

Published On:

| By Kumaresan M

துபாயில் இந்திய பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் அரபி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

துபாயைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளும் இளம் வயதிலேயே அரபிய மொழியில் புலமை பெற வேண்டுமென்ற நோக்கத்தில் துபாய் கல்வித்துறை அமைச்சகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. அதாவது 4 முதல் 6 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு அரபி மொழி பள்ளியில் கற்று கொடுக்கப்படும். நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.dubai : Arabic for kids under 6

Dubai’s Knowledge and Human Development Authority (KHDA) என்கிற அமைப்புதான் அரபி மொழியை குழந்தைகளுக்கு கற்று கொடுக்கும் பணியை செய்து வருகிறது. பெற்றோர் அரசு எடுத்த இந்த முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும். குழந்தைகளுக்கு அரபி மொழியை வீட்டில் இருக்கும் போது சொல்லி கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ddubai : rabic for kids under 6ubai : Arabic for kids under 6

Dubai’s Knowledge and Human Development Authority அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பாத்மா பெல்ரெகப் கூறுகையில், ‘குழந்தைப் பருவத்திலிருந்தே அரபு மொழியின் மீதான அன்பையும் ஈர்ப்பையும் வளர்ப்பது அவசியமாகிறது. எமிரேட்சை சேர்ந்த குழந்தையோ அல்லது அரபிய குழந்தையோ அரபியை தாய் மொழியாக கொண்டிராத குழந்தையாக இருந்தாலும் அமீரகத்தின் மொழி மற்றும் கலாச்சாரத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். dubai : Arabic for kids under 6

துபாய் கல்வித்துறையின் இந்த முடிவு காரணமாக இந்திய குழந்தைகளும் இனிமேல் அரபி மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share