ட்ரை ஃப்ரூட்ஸ் தரும் எனர்ஜி அலாதியானது. புரோட்டீன், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துகளும், பலன்களும் மிக அதிகம் கொண்ட ட்ரை ஃப்ரூட்ஸை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது ஆபத்து என்கிற நிலையில் பிக்கிள் செய்து கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்கலாம்.
என்ன தேவை?
நறுக்கிய பாதாம் – அரை கப்
உலர்திராட்சை – அரை கப்
தர்பூசணி விதைகள் – கால் கப்
நறுக்கிய பேரீச்சம்பழம் – கால் கப்
நறுக்கிய முந்திரி – கால் கப்
வெல்லம் – 2 கப்
தண்ணீர் – முக்கால் கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வறுத்த சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் நட்ஸ் வகைகள் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொதிக்க விடவும். வெல்லக் கரைசல் கெட்டியாகும்போது உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்துப் பயன்படுத்தவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் குக்கீஸ்
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் சிக்கி
புறப்பட்டார் ஸ்டாலின்… இதுவரை அமெரிக்கா சென்ற தமிழ்நாடு முதல்வர்கள் பத்தி தெரிஞ்சுக்கங்க!
அமெரிக்கா பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றமா? ஸ்டாலின் ‘நச்’ பதில்!
