கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை தட்டை!

Published On:

| By Kavi

ஆடி மாதம் பிறக்கும் முன்பே முருங்கை சீசன் ஆரம்பித்திருக்கிறது. இந்த சீசனில் கிடைக்கும் முருங்கையிலைகளை வாங்கி தட்டை செய்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வார வீக் எண்டை முருங்கை ஸ்நாக்ஸ் ஸ்பெஷலாக்குங்கள். இந்தத் தட்டையை காற்று புகாத டப்பாவில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கும் சாப்பிடலாம்.

என்ன தேவை?

சுத்தம் செய்த முருங்கையிலை – கால் கப்

அரிசி மாவு – ஒரு கப்

உளுத்த மாவு (வறுத்து அரைத்தது) – ஒரு டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகச் சேர்க்கவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி இதனுடன் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர்விட்டு மாவாகப் பிசைந்துகொள்ளவும். மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய பூரி வடிவில் தட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டைகளைப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: குடமிளகாய் – முந்திரி ரைஸ்!

கிச்சன் கீர்த்தனா: பிரெட் வெஜ் ஆம்லெட்!

இந்த அக்கா – தம்பி பாசம் தாங்க முடியல… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: லெமன் டீ கொடுத்த தமிழிசை- ஸ்வீட் கொடுத்த அண்ணாமலை- சந்திப்பில் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share