போதைப்பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது!

Published On:

| By Kavi

Drug case krishna arrested

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். Drug case krishna arrested

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையிலும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசார் விளக்கம் அளித்தனர்.

ADVERTISEMENT

ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், அவா் தனது வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் போலீசார் முன் ஜூன் 25ஆம் தேதி ஆஜரானாா். ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விடியவிடிய விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

14 மணி நேரத்திற்கும் மேலான விசாரணையை தொடர்ந்து போலீசார் இன்று (ஜூன் 26) கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டில் இன்று காலை முதல் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கைதானவர்களுடன் கிருஷ்ணாவின் செல்போன் உரையாடலை ஆய்வு செய்யத் தொடங்கினர். இதில் கோர்டு வேர்டுகளில் இவர்கள் பேசியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் கிருஷ்ணாவை கைது செய்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share