ஓட்டுநா் உரிமங்கள் இதுவரை ஆா்டிஓ அலுவலகங்களில் நேரடியாகத் தரப்பட்ட நிலையில், இனி விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பதாரரின் வீட்டுக்கே ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. Driving Licence Delivered by Post
சென்னை கிண்டியில் ரூ. 41.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தை திறந்து வைத்த இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்,
விரைவு அஞ்சல் மூலமாக ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சா் சி.சிவசங்கா், உள்துறைச் செயலா் பெ.அமுதா, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவா் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதையடுத்து மாநிலத்தில் உள்ள 91 ஆர்டிஓ அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்களிலிருந்து பதிவுச் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை விரைவு அஞ்சல் மூலமாக விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பும் திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, அனைத்து ஓட்டுநா் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது.
‘வாகன்’ மற்றும் ‘சாரதி’ உள்ளிட்ட செயலிகளில் தவறான தொடா்பு எண் மற்றும் முகவரியை குறிப்பிட்டதன் காரணமாக, அஞ்சல் திரும்பப் பெறப்பட்டால் உரிய விண்ணப்பம் செய்து, கட்டணம் செலுத்தி திருத்தம் செய்யப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட ஆவணம் விரைவு அஞ்சலில் அனுப்பப்படும்.
வீட்டில் ஆள் இல்லை என்று அஞ்சல் திரும்பப் பெறப்பட்டாலும் விண்ணப்பதாரரிடமிருந்து உரிய மதிப்பில் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட அஞ்சல் உறை பெறப்பட்டு, அதன் மூலமாகவே அனுப்பப்படும்.
இடைத்தரகர்களின் முகவரி, தொடா்பு எண் போன்றவை குறிப்பிட்டிருந்தால் சம்பந்தப்பட்ட ஆவணம் தற்காலிக முடக்கம் செய்யப்படும்.
மேலும், தவறான முகவரி கொடுக்கப்பட்டிருந்தால் அதற்கு விண்ணப்பதாரரே முழு பொறுப்பு என்றும் இந்த முயற்சியின் மூலம் அலுவலகத்துக்குப் பொதுமக்களின் வருகை கணிசமாகக் குறையும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
தொண்டர்களை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்
ஹெல்த் டிப்ஸ்: உடல் பருமனும்… தவறான நம்பிக்கைகளும்…
பியூட்டி டிப்ஸ்: உங்கள் நிறத்துக்கேற்ற நெயில் பாலிஷ் எது?