கோடைக்காலம் என்றால் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்தும் விஷயம். இந்த நிலையில் நீங்கள் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு இதோ… drinking water limit in summer
6 – 10 வயதுக்கு உட்பட்ட வளரும் பருவத்தினர் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அலுவலகப் பணியில் ஈடுபடும் 20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காலகட்டத்தில் வெளியிடங்களுக்குச் செல்பவர்கள், வெயிலில் உழைப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம்.
உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால்தான், ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். ரத்த ஓட்டம் சரியாக இருந்தால்தான், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
கால் வீக்கம், இதய நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக் கூடாது. இப்படிப்பட்டவர்களின் உடலில் அதீதமான நீர் சேர்வது ஆபத்தில் முடியும்.
“மனித மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் உள்ளது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது. அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது. எனவே, குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்” என்கின்றனர் மருத்துவர்கள்.