ADVERTISEMENT

காபி குடித்தால் நீண்ட நாள் வாழலாம் : ஆய்வு!

Published On:

| By Kavi

Drinking coffee can help you live longer

காலையில் எழுந்தவுடன் அந்த நாள் தொடங்குவது ஒரு டீ அல்லது காபியில்தான். சிலருக்கு காபி குடித்தால் அந்த நாளே அவர்களுக்கு சுறுசுறுப்பாக தொடங்கும். Drinking coffee can help you live longer

இந்நிலையில், காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லது என சமீபத்திய ஆய்வின் முடிவுகள்  கூறுகின்றன. தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் காபி குடிப்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 

ADVERTISEMENT

அதில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரியவந்துள்ளது. பால் இல்லாத ‘பிளாக்’ காபி குடிப்பது ஆரோக்கியமானது என்று எந்த ஆய்வு கூறுகிறது. 

எனினும்  ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் பிளாக் காபி குடிப்பது இறப்பு அபாயத்தையும், இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. 

ADVERTISEMENT

நீங்கள் குடிக்கும் காபியில்  எவ்வளவு சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பைச் சேர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இதன் நன்மைகள் இருக்கும்.

இந்த ஆய்வின் படி காபி குடிக்காதவர்களை விட பிளாக் காபி அல்லது சிறிது சர்க்கரை மற்றும் கொழுப்புடன் காபி குடித்தவர்களுக்கு இறக்கும் ஆபத்து 14% குறைவாக இருந்துள்ளது. 

ADVERTISEMENT

சர்க்கரை மற்றும் கொழுப்பை காபியில் அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது அதில் நன்மை இருக்காது என்று அந்த ஆய்வு எச்சரிக்கிறது. 

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கப் காபி குடிப்பதால்,  இறக்கும் அபாயம் 16 சதவீதம் குறைவதாகவும், தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதமாக குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Drinking coffee can help you live longer

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share