திராவிட சித்தாந்தம் நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இன்று சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, “இந்நாளில்(ஆகஸ்ட் 14), முஸ்லிம்களுக்கு என ஒரு சொந்த நாடு தேவை என அகில இந்திய முஸ்லிம் லீக் கடுமையாக நிர்பந்தித்ததன் விளைவால் பாரதம் பிளவுபடுத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வேரறுத்து அகதிகளாக்கப்பட்ட ஒன்றரை கோடிக்கும் அதிகமான அப்பாவி இந்தியர்களையும், கொல்லப்பட்ட ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களையும், பல லட்சம் இந்திய சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தியும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் வேறு மதத்துக்கு மாற்றியும் நடந்த கொடுமைகளை நினைவுகூர்வோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்
பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தது. அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை.
.
இந்தியாவை ஆண்ட முந்தைய அரசு நமது நிலத்தை அண்டை நாடுகளுக்கு தாரை வார்த்தது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் தான் நமது மீனவர்கள் அண்டை நாட்டு ராணுவத்தால் சுடப்படுகின்றனர்” என்று குறிபிட்டார்.
இதற்கிடையே சுதந்திர தின செய்தியை வெளியிட்டுள்ள ஆளுநர் ரவி, “’தமிழ்நாடு’ பாரதத்தின் அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. எனினும், பள்ளிகள், கோயில்கள், கிராமத் திருவிழாக்கள் போன்றவற்றில் தலித்துகளுக்கு எதிரான சமூக பாகுபாடுகள் குறித்து அடிக்கடி வரும் செய்திகள் மிகவும் வேதனைக்குரியவை மற்றும் மிகவும் வெட்கக்கேடானது.
அத்தகைய சமூக பாகுபாடுகள் வெறுக்கத்தக்கவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தலித்துகள் நமது சகோதர, சகோதரிகள். இந்த பாரபட்சமான நடைமுறைகளை புறந்தள்ளி, அவர்களை இரு கரங்களுடன் ஆரத்தழுவுமாறு உங்கள் அனைவருக்கும் நான் உளப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஊரப்பாக்கத்தலேயே லீவு முடிஞ்சிரும் போல : அப்டேட் குமாரு
அமலாக்கத் துறை இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்!
Comments are closed.