திராவிடர் இயக்க முதுபெரும் சிந்தனையாளர் தஞ்சை இரா. இரத்தினகிரி காலமானார்

Published On:

| By Mathi

R Rathinagiri

திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் சிந்தனையாளர்களில் ஒருவரான தஞ்சை இரா. இரத்தினகிரி (வயது 86) இன்று காலமானார்.

  • இரா. இரத்தினகிரி, 15.03.1939-ல் தஞ்சாவூரில் இராமச்சந்திரன்- வள்ளியம்மை தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.
  • தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று ’தஞ்சாவூர் சிந்தனையாளர் மன்றத்தை’ நிறுவினார்.
  • கால்நடைத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டே திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார். தமிழ்நாடு கால்நடை நலச்சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
  • 11-வது திட்டக் குழுவின் உறுப்பினராக, கால்நடை வளர்ப்பு- பால்வளத்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி துறைகளின் ஆலோசகராகப் பணியாற்றினார்.
  • மத்திய அரசின் சுரங்கத் துறை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
  • உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலராக, ‘பெரியார் இயக்கம்’ மாத இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராகவும் இருந்தார் இரா. இரத்தினகிரி.
  • தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவராக 30 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் கருவூலம்’ காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொள்ளாச்சி மா.உமாபதி மற்றும் தஞ்சை இரா. இரத்தினகிரி இருவரும் இணைந்து உருவாக்கினர். இதற்காக கலைஞர், தன் கையெழுத்திட்ட கணையாழியை பரிசாக வழங்கினார்.
  • திமுக நிகழ்ச்சிகளைத் தொகுத்து ‘நமது இயக்க நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டு கலைஞரின் பாராட்டைப் பெற்றார்.
  • தந்தை பெரியாரின் குடியரசு இதழ்களை சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சென்று சேகரித்து அவற்றை பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டதில் முதன்மை பங்காற்றியவர்.
  • ‘பெரியார் நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் திராவிடர் கழக நிகழ்ச்சிகளைத் தொகுத்து நூலாக்கியவர். 1976-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
  • தந்தை பெரியார் வாழ்வும் தொண்டும்
    சுயமரியாதைச் சூரியன்
    தந்தை பெரியார் தத்துவ விளக்கம்
    மணக்கும் மனிதநேயம்
    மனிதம் மேம்பட
    EVR The Revolutionary உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார்; நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதினார்.
  • தஞ்சாவூர் தமிழிசை மன்றத்தின் பெரியார் விருது பெற்றவர்.

86 வயதாகும் தஞ்சை இரா.இரத்தினகிரி, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share