‘திரௌபதையின் முத்தம்’: கர்ணனின் மூன்றாவது பாடல்!

Published On:

| By Balaji

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தனுஷே தொலைப்பேசியில் அழைத்து கதை கேட்டார். அப்படி தனுஷ் தேடி வந்த இயக்குநர் மாரி செல்வராஜ். தனுஷுடன் லால், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களுமே செம ஹிட். முதல் சிங்கிளான ’கர்ணன் அழைப்பு’ பாடலான கண்டா வரச்சொல்லுங்க பெரியளவில் வரவேற்பை பெற்றது. இப்பாடலை சந்தோஷ் நாராயணனுடன் நாட்டுப்புற பாடகி மாரியம்மா இணைந்துப் பாடியிருப்பார். இந்தப் பாடலை மாரி செல்வராஜ் எழுதியிருந்தார்.

இரண்டாவது பாடல், பண்டாரத்தி புராணம். தேவா குரலில் யுகபாரதி எழுத்தில் கேட்பவர்களின் உள்ளுக்குள் புது அனுபவத்தை விதைத்திருக்கும். நாட்டுப்புற பாடலுக்கு தேவாவின் குரல் மிகச்சிறந்த தேர்வு எனப் பாராட்டையும் பெற்றது.

ADVERTISEMENT

வழக்கமான திரையிசைப் பாடல்களாக இல்லாமல், ஒவ்வொரு பாடல்களிலுமே புதுமையை புகுத்தி கவனம் ஈர்த்துவருகிறார். இந்த நிலையில், மூன்றாவது பாடலாக ‘திரௌபதையின் முத்தம்’ பாடல் நாளை வெளியாக இருக்கிறது. காதலும் காதல் நிமித்தமுமாக இந்தப் பாடல் இருக்கும். ரசிகர்கள் இந்தப் பாடலுக்காக வெறித்தன வெயிட்டிங்!

**- ஆதினி**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share