குடியரசு தினவிழா கோலாகலம்: தேசியக்கொடி ஏற்றினார் திரவுபதி முர்மு

Published On:

| By Minnambalam

Draupadi murmu hoist flag Republic Day

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் இன்று (ஜனவரி 26) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார்.

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்.

ADVERTISEMENT

டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்னதாக போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போர் நினைவிட வருகை பதிவேட்டில் மோடி கையெழுத்திட்டார்.

ADVERTISEMENT

பிரான்ஸ் அதிபர் மேக்ரான், திரவுபதி முர்மு ஆகிய இருவரும் குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து கடமை பாதைக்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் புறப்பட்டனர்.

பின்னர் செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற முப்படை அணிவகுப்புகளை திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் 75 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செல்வம்

சிங்கப்பூர் சலூன்: விமர்சனம்!

ப்ளூ ஸ்டார்: விமர்சனம்!

முகமது ஜூபேருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது!

தங்கம் விலையில் மாற்றமா?: இன்றைய நிலவரம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share