இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முதல் கட்ட பணிகள் முடிவடைய உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு இன்று டிசம்பர் 6-ந் தேதி மாலை 3 மணி வரை 6,40,24,854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது 99.86 சதவீதம் ஆகும்.
இதில் வாக்காளர்களிடம் இருந்து பெற்றப்பட்ட 6,32,77,465 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளன. இது 98.69 சதவீதம் ஆகும்.
நீங்கள் கொடுத்த விண்ணப்ப படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதா? அப்படி பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டதா? என்பதை இப்போதே சரி பார்த்து கொள்ள முடியும்.

இதற்கான இணையதள முகவரி:
https://electoralsearch.eci.gov.in
இந்த இணையத்தில் 3 வகைகளில் உங்களது பெயர் இடம் பெற்றுள்ளதாக என சரிபார்க்க முடியும்
1) Search by EPIC
2) Search by Details
3) Search by Mobile
இந்த பிரிவுகளை பயன்படுத்தி உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என சரி பார்க்க முடியும்.
Search by EPIC -ல் வாக்காளர் அடையாள அட்டை எண், மாநிலம், கேப்சா குறியீடு ஆகியவற்றை மட்டும் கொடுத்தால் போதும்..

உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண், பெயர், வயது, உறவினர் பெயர், மாநிலம், மாவட்டம், தொகுதி, பகுதி, வாக்குச் சாவடி, பகுதி வரிசை எண் ஆகியவை காண்பிக்கும்.
அத்துடன் Action என்ற காலத்தில் View Details என்ற லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்தால்

SIR படிவத்தில் இடம் பெற்றுள்ள உங்களது விவரங்கள்- திருத்தம் செய்ய வேண்டும் எனில் அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள், உங்கள் தேர்தல் அதிகாரி (மாவட்ட ஆட்சியர்), BLO எனப்படும் வாக்குச் சாவடி அலுவலர் பெயர், தொலைபேசி எண் விவரம் அதில் இருக்கும்.
Search by Details
இந்த ஆப்சனில் உங்களது பெயரை சரிபார்க்க முடியவில்லை எனில்
Search by Details-ல் முயற்சிக்கவும்
மாநிலம், மொழி, பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி ஆகிய விவரங்களைக் கொடுக்கவும். இவை அனைத்தும் சரியாக இருந்தால்
Search by Mobile
இந்த ஆப்சனிலும் உங்களது பெயர் இல்லை எனில் Search by Mobile என்ற ஆப்சனில் மாநிலம்/ மொழி ஆகியவற்றை தேர்வு செய்து மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு கேப்சா எழுத்துகளை பதிவிடவும்
பின்னர் SEND OTP ஆப்சனை கிளிக் செய்தால் OTP உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.
அப்படி மொபைல் எண் பதிவு செய்யப்படாத நிலையில்
“Mobile Number not registered. Check the mobile No./State Selected. The facility to update your mobile no. is available in Form8.” என காண்பிக்கும்.
இந்த ஆப்சன்களில் உங்களால் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை கண்டறிவதில்/ சரிபார்ப்பதில் சிரமம் இருந்தால் உங்களது BLO – வாக்குச் சாவடி அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்கலாம்.
