பாமக சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்பு மணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா அரங்கில் சிறப்பு பொதுக்குழு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி பேசுகையில், “தமிழகத்தின் வலிமையான தவிர்க்க முடியாத அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக நீடித்த பாட்டாளி மக்கள் கட்சி சமீபகாலமாக சற்று தேக்க நிலையில் அங்கீகாரத்தை இழந்துள்ளது. வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் ஊக்கத்துடன் செயல் பட்டு கட்சியை பலப்படுத்த கட்சி அமைப்பு விதி 13 திருத்தங்களின் படி நிர்வாக குழு மற்றும் செயற்குழு முடிவுகளின் படி 30.5.2025 முதல் கட்சியின் தலைவராக மருத்துவர் ராமதாஸ் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்படுவார் என்பதை 17.8.2025 மாநில சிறப்பு பொதுக்குழு ஒரு மனதாக அங்கீகரிக்கிறது. ராமதாஸ் இப்பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார் என்று பொதுக்குழு உறுதி செய்கிறது” என தெரிவித்தார்.
-பாமக சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம்:
