ADVERTISEMENT

ராமதாஸ் பயோபிக்கை இயக்கும் சேரன் – நடிகர் யார் தெரியுமா? வெளியான ஃபர்ஸ்ட்லுக்!

Published On:

| By Kavi

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கையை இயக்குநர் சேரன் படமாக எடுத்து வருகிறார்.

பாமக நிறுவனர் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது என்றும் அதை சேரன் இயக்குகிறார் என்றும் முதலில் தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இதை உறுப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை 16ஆம் தேதி இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று உங்கள் பேராதரவுடன் ஒரு புதிய பயணம் தொடங்குகிறேன்.. உங்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் தேவை.. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும். ஒரு முக்கிய திரைப்படம் மக்களுக்காக தயாராகிறது . விடியல் ஆரம்பம்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில் ராமதாஸ் பயோபிக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சேரன் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு அய்யா என்று பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ் குமரன் புரடக்‌ஷன்ஸ் சார்பாக ஜி.கே.எம். தமிழ்குமரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கிறார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள சேரன், “இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு” எனவும், குரலற்றவர்களுக்காக அவரது குரல் கர்ஜித்தது. இப்போது, அவரது கதை பெரிய திரையில் கர்ஜிக்க போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 87ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சேரன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share