குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம், விருமன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.
தொடர்ந்து கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிவரும் இவர் தற்போது ’காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்த சித்தி இத்னானி இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
’காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வரும் இந்தப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரஸ்டிக் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

’காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) ’தௌலத்தான ரவுடி’ பாடலின் புரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் ஆர்யா கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்து வெறித்தனமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.
இதேபோல் நடிகையும், ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான ’பத்து தல’ படத்தில் வெளியான ’ராவடி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
