பியூட்டி டிப்ஸ்: சிறிய மார்பகங்களைப் பெரிதாக்க நினைக்காதீர்கள்!

Published On:

| By christopher

காலம் காலமாக பல பெண்களின் மனதுக்குள் அழுந்திக் கிடக்கிற ஒரு புழுக்கம், ‘தன்னுடைய மார்பகம் சிறியதாக இருக்கிறது’ என்கிற எண்ணம். சிறிய மார்பகம் இருக்கிற பெண்களுக்கு குழந்தைப் பிறந்ததும் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது என்கிற தவறான புரிதலும் பலரிடம் இருக்கிறது.

சிறிய மார்பகங்களில் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காதோ என்று கவலைப்படுகிற பெண்கள் அச்சப்படுவதில் எந்த மருத்துவ உண்மையையும் இல்லை. தாய்ப்பால் சுரப்புக்கும் மார்பகங்களின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஹார்மோன் சம்பந்தப்பட்ட விஷயம்.

அடுத்து, சிறிய மார்பகம் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி கிடைக்காது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் பார்த்தால் இதுவும் தவறுதான்.

சிறிய மார்பகங்கள்தான் சென்சிட்டிவ். மொத்த நரம்புகளும் சிறிய இடத்தில் இருப்பதால், இந்தப் பெண்களுக்கு தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி அதிகமாக கிடைக்கும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள்தான், பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களை விரும்புகிறார்கள் என்கிற தகவல் சமூக வலைதளங்களில் உலவி கொண்டிருக்கிறது.

உண்மையில் ஆணும் பெண்ணும் சமம் என்கிற அடிப்படை புரிதல் கொண்ட ஆணுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. இந்த அடிப்படை புரிதல் இல்லாத ஆண்களும், அதே போன்ற எண்ணவோட்டத்துடன் அவனைச் சுற்றி இருப்பவர்களும்தான் இதுபோன்ற எண்ணங்களை சமூகத்தில் இன்னமும் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உடல் உறுப்புகள் பற்றிய கருத்துகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. அதற்காக வருத்தப்படுவதோ, மார்பகங்கள் பெரிதாக தெரிய வேண்டும் என்பதற்காக, மார்க்கெட்டில் கிடைக்கிற க்ரீம்களை பயன்படுத்துவதோ தேவையில்லாத விஷயங்கள்.

அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை பெரிதுப்படுத்திக்கொள்வது, உங்கள் உடலுக்கு தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தலாம்’’ என்று எச்சரிக்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : ஈரோடு கிழக்கு வேட்புமனு தாக்கல் முதல் கேம் சேஞ்சர், வணங்கான் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : ரெட் வெல்வெட் பொங்கல்

திருப்பதி கூட்டநெரிசல்… சந்திரபாபு நாயுடு கொடுத்த உறுதி!

தண்டர் போல்ட்’ கிக் ‘அடிப்பவருக்கு மனைவி ‘கிக்’ கொடுத்தாரா? ரபார்ட்டோ கார்லஸ் சொத்துக்களை இழக்கிறாரா?

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற டோனர் எது?

ஹெல்த் டிப்ஸ்: வேலை, வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பவரா நீங்கள்? ஒரு நிமிஷம் நில்லுங்கள்!

இந்த மாச 1000 ரூபாய்… இன்னைக்கே மெசேஜ் வந்துருக்கா பாருங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share