கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் மோர். ஆனால், மோரை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிப்பது தவறான பழக்கம். ஏனென்றால், புளிப்பு மிக்க உணவுப் பொருளை பிளாஸ்டிக்கில் ஊற்றும்போது, அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். எனவே, பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றப்பட்ட மோரைக் குடிக்கும்போது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக் குடிக்கிறோம். அதற்கு ஜீனோ பயாக்டிஸ் (Xeno biotics) என்று பெயர். buttermilk in plastic bottle
கடந்தாண்டு டிசம்பரில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ”வெவ்வேறு நிறுவனங்களின் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், கண்ணுக்கு தெரியாத 2.40 லட்சம், ‘மைக்ரோ’ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை, செரிமானப் பாதை அல்லது நுரையீரலின் திசுக்கள் வழியாக சென்று, ரத்த ஓட்டத்தில் நுழைந்து, பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த பிளாஸ்டிக் துகள், மனித நுரையீரல், ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் கண்டறியப்பட்டுள்ளது. தீங்கு விளைவிக்கக்கூடிய இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில், துருப்பிடிக்காத, ‘ஸ்டீல்’ பாட்டில், மூங்கில் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும்” என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
எனவே, எந்தெந்தப் பொருட்களை பிளாஸ்டிக்கில் வைக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உணவுப் பொருள்களைப் பொறுத்தவரை அரிசி, பருப்பு இவை மட்டுமே பிளாஸ்டிக் கன்டெயினரில் வைக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது.
உப்பு, ஊறுகாய் என எதுவும் வைக்கக் கூடாது. அப்படித்தான் மோரும். காலையில் வைக்கும் மோரில் நேரமாக, புளிப்பு ஏற, ஏற அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். அதற்குப் பதில் எவர்சில்வர் பொருட்களைப் பயன்படுத்தலாம். buttermilk in plastic bottle
