நம்மில் பலர் உடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவைக்கூட பலரும் உள்ளாடை விஷயத்தில் கொடுப்பதில்லை. உண்மையில், உடைகளைவிடவும் உள்ளாடைத் தேர்வும் பயன்பாடும்தான் மிக முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும்.
உங்களிடம் எத்தனை செட் உள்ளாடைகள் உள்ளன என்பது முக்கியம். தினம் ஒன்று என வாரத்துக்கு ஏழு செட் வைத்து மாற்றி மாற்றி உபயோகிக்கிறீர்கள் என்றாலே, அவற்றை அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.
அதுவே, பத்து, பதினைந்து செட் வைத்திருக்கிறீர்கள், அடிக்கடி உபயோகிப்பதில்லை என்ற பட்சத்தில் அவற்றை எட்டு – ஒன்பது மாதங்கள் வரைகூட பயன்படுத்தலாம், பிரச்னையில்லை. பிராண்டடு உள்ளாடைகளுக்கும் இது பொருந்தும்.
நீங்கள் உபயோகிக்கும் உள்ளாடைகளின் தரமும் இதில் முக்கியம். தரமற்ற, மலிவான துணிகள் என்றால் மேற்குறிப்பிட்ட அட்வைஸ் பொருந்தாது.
உள்ளாடைகளை எத்தனை நாள்களுக்கொரு முறை உபயோகிக்கிறீர்கள் என்பதைப் போலவே அவற்றை எப்படிப் பராமரிக்கிறீர்கள் என்பதும் முக்கியம்.
உள்ளாடைகளை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து, சிறிதும் ஈரமின்றி உபயோகிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், உடைகளைப் போலவே உள்ளாடைகளையும் அயர்ன் செய்து உபயோகிப்பது சிறந்தது.
நாமெல்லாம் வெப்ப மண்டலப் பகுதிகளில் வசிப்பதால், உடல் சூடும், அதனால் ஏற்படும் வியர்வையும் அதிகமிருக்கும். உள்ளாடைகளில் லேசான ஈரப்பதம் இருந்தாலும் ஃபங்கல் இன்பெக்ஷன் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
ஹாஸ்டலில் தங்கியிருப்போர், பேச்சிலர்ஸ் போன்றோர் இடவசதி பற்றாக்குறை காரணமாக உள்ளாடைகளை முழுமையாகக் காயவைக்காமல், பாதி ஈரப்பதத்துடன் எடுத்து அணிவார்கள். அது மிகவும் தவறு.
முடிந்தவரை உள்ளாடைகள் முழுக்க முழுக்க காட்டனால் ஆனவையாக இருப்பது சிறப்பு. எலாஸ்டிக் தரமாக இருக்க வேண்டும். உள்ளாடைகளுக்குச் செலவு செய்வதில் அலட்சியம் வேண்டாம். அது உங்கள் ஆரோக்கியத்துக்கான அடிப்படை முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் மகாவிஷ்ணு… கஸ்டடியில் என்ன நடக்கிறது?
சீக்கியர்கள் குறித்த பேச்சு… ராகுல் வீட்டை முற்றுகையிட்ட பாஜக
எங்கடா அந்த மஞ்ச சேல : அப்டேட் குமாரு
இமானுவேல் சேகரன் நினைவு தினம்… தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?